விருதுகள்

சென்னை மாணவர் மன்றச் சார்பிலும், அனைத்துப் பள்ளிகளின் சார்பிலும் நடைப்பெற்ற பல்வேறு கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டிகளில் பெற்ற பல பரிசுக் கோப்பைகள், பதக்கங்கள்.

அனைத்துக் கல்லூரி மாணவர்க்கென, காரைக்குடி அழகப்பா கல்லூரி நடத்திய கவிதைப் போட்டியில் முதற்பரிசாகப் பெற்ற கவியரசர் கண்ணதாசன் அவர்களின் அன்னையார் நினைவுச் சுழற்கோப்பை.

மதுரைத் தமிழ் எழுத்தாளர் மன்றம் நடத்திய கவிதைப் போட்டியில் பெற்ற பரிசும், பதக்கமும்.

அனைத்திந்திய மாணவர்க்காக, தாகூர் நூற்றாண்டு விழாக் குழு நடத்திய கவிதைப் போட்டியில் முதற்பரிசாக வழங்கப்பட்ட தங்கப்பதக்கம்.

‘வண்ணத் தோகை’ கவிதை நூலுக்காக, தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சிக் கழகம் வழங்கிய பரிசும் பதக்கமும்.

‘தலைசிறந்த கவிஞர்’ என்று அன்னை சந்தனம்மாள் அறக்கட்டளை அளித்த விருதும், கேடயமும்.

நெடிய கவிதைப் பணிக்காக, தமிழக அரசு வழங்கிய ‘பாவேந்தர் பாரதிதாசன்’ விருது, பணமுடிப்பு, கேடயம்.

தமிழனத் தலைவர் கலைஞர் அவர்களால் வழங்கப்பட்ட ‘கவிவேந்தர்’ விருதும் கேடயமும்.

சேலம் கே.ஆர்.ஜி. அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்ட ‘பகுத்தறிவிணர்வுப் பாவலர்’ விருதும் கேடயமும்.

குழித்தலை ‘தமிழ்க் கா.சு.’ நினைவுக் குழுவின் சார்பில் அளிக்கப்பட்ட ‘அறநெறி ஆண்மையர்’ விருதும் பட்டயமும்.

அமெரிக்க நாட்டு ‘பாஸ்டன் தமிழ்ச் சங்க’ச் சார்பில் வழங்கப்பட்ட ‘இலக்கியச் செம்மல்’ விருதும் கேடயமும்.

தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் இயற்றமிழ்ப் பணிக்கென வழங்கிய ‘கலைமாமணி’ விருதும் பதக்கமும்.

இன்ன பிற விருதுகளும் பரிசுகளும்.