கவிவேந்தர் கா.வேழவேந்தன்

பேரறிஞர் அண்ணாவே தம் கைப்பட மடல் எழுதி கவிதை கேட்ட கவிஞர் கா.வேழவேந்தன், பின்னர் கவிவேந்தர் என்னும் விருதும் கேடயமும் பரிசுகளும் பெற்ற பெருமைக்கு உரியவர்

அமைச்சரவையில்

அறிவாற்றல் மிக்க இவர் டாக்டர் கலைஞர் அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகத் திகழ்ந்தவர்.10 ஆண்டுகள் கும்முடிப்பூண்டி சட்டப்பேரவையில் உறுப்பினராக திகழ்ந்தவர்.

இவர் அமைச்சராக இருந்த போதுதான் ‘மே தின விடுமுறை’ச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது என்பது சரித்திர உண்மை

அவர் பெற்ற விருதுகள் சில

  • பாவேந்தர் பாரதிதாசன் விருது
  • பாரதிதாசன் விருது
  • முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது
  • லைமாமணி விருது
  • கவிவேந்தர்
  • எழுத்தரசர்

சிறுவயதில் தனித்தமிழ்

இவர் மாணவப்பருவத்திலேயே அன்னைத்தமிழில் எழிற்கவிதை எழுதத் தொடங்கிவிட்டார். வள்ளுவரின் உயரிய சிந்தனைகளைத் தம் கவிதைகளில் நேர்த்தியுடன் தந்து வருகிறார் இவர்.

‘கசேந்திரன்’ எனும் தன வடமொழி இயற்பெயரை ‘வேழவேந்தன்’ என்று தனித்தமிழில் மாற்றிக்கொண்டவர் இவர்.

படைப்பிலக்கியம்

மிகப் பலரும் மரபை மறந்த நிலையில் – பாவேந்தர் கருத்து மனமும், சுரதாவின் உவமையழகும் மிளிர இயல்பாகப் பாடுவதில் இணையற்றுத் திகழும் கவிஞர் உரைநடையிலும் வல்லவர். இதற்கு, இவருடைய கதை நூல்களும், கட்டுரைகளும் சான்று சொல்லும். அவற்றுள் சில……

என்னைப்பற்றி

பிறந்த நாள் : 05.05.1936. பிறந்த மண் : காரணி. இந்த இனிய சிற்றூர், அன்றைய தொண்டை வள நாட்டின் செங்கை மாவட்டத்திற்கு உரியது: இன்றைய கும்மிடிப்பூண்டி வட்டத்து ஆரணி ஆற்றங்கனரயில் அமைந்தது.

விருதுகள்

சென்னை மாணவர் மன்றச் சார்பிலும், அனைத்துப் பள்ளிகளின் சார்பிலும் நடைப்பெற்ற பல்வேறு கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டிகளில் பெற்ற பல பரிசுக் கோப்பைகள், பதக்கங்கள்

வகித்த பொறுப்புகள்

சென்னை பச்சையப்பன் கல்லூரித் தமிழ்மன்றத் தலைவர்.

அனைத்துக் கல்லூரிகள் தமிழ்ப் பேரவைத் தலைவர்.